மன்னாரில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டபோதும் மக்கள் வெளியேற்றம் குறைவு….

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ)

மன்னார் மாவட்டத்தில் செவ்வாய் கிழமை (28.04.2020)  ஊரடங்குச்சட்டம்
தளர்த்தப்பட்ட நிலையிலும் மக்களுடைய நடமாட்டம் முன்னையதைவிட மிகவும்
குறைவாகவே காணப்பட்டது

நேற்றையத் தினமhகிய செவ்வாய்கிழமை நாடளாவிய ரீதியில் குறித்த சில
மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது
இதில் மன்னார் மாவட்டமும் ஒன்றாகும்.

ஆனாலும் அன்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் அதிகளாவன மக்கள் வீடுகளை
விட்டு வெளியேற வில்லை பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் மக்கள்  ஆர்வம்
காட்டாமையையும் அவதனிக்கக் கூடியதாக இருந்தது

இதில் ஒரு சில காரணங்களும் தெரிவிக்கப்பட்டது. அதாவது கிராம
புறங்களிலிருந்து நகர் நோக்கிய போக்குவரத்து இன்மை, அதுவும் ஒரு பஸ்
வண்டியில் ஒரு ஆசனத்தில் ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற
கட்டுப்பாடு

மக்கள் மத்தியில் பணப்புழக்கம் இல்லாமை, அடுத்து பலர் நிவாரணப் பொருட்கள்
பெற்றிருந்தமையால் அவற்றைக் கொண்டு சமாளிக்கலாம் என்ற நோக்கில்
இருந்தமையாலே மக்கள் வருகை குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மரக்கறி உற்பத்திகளின் விலை குறைவாக காணப்பட்டமையினால் பொருட்கள் வாங்க
வந்த  மக்கள் அதிகளவில் மரக்கறி  கொள்வனவில் ஈடுபட்டதை நோக்கக் கூடியதாக
இருந்தது.

அத்துடன் அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள அடையாள அட்டை இலக்கத்தின்
அடிப்படையிலும் அதற்கு அப்பாலும் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவுக்கு என
வெளியே  பலர் வந்திருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது

அதே நேரத்தில் பெரும்பாலானோர் சமூக இடைவெளியை பின்பற்றியும்  முகக்
கவசங்கள் அணிந்து சுகாதார முறைகளை பின்பற்றியமை குறிப்பிடதக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.