பெங்களூரிலிருந்து 164 பேர் இலங்கை வந்தடைந்தனர்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவின் பெங்களூரில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 164 பேர், விசேட விமானத்தின் மூலம் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்தியாவின் பெங்களூர் நகரிலிருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான UL 1172 எனும் விமானம், மாணவர்களுடன் இன்று பிற்பகல் 12.40 மணியளவில் விமான நிலையத்தை வந்தடைந்தது.

164 மாணவர்களும் விசேட பஸ்களில் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் நாடுகளில் வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கை மாணவர்கள் உட்பட இலங்கையர்கள் சிலர் அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்