கொரொனா தடுப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சுதேச மருத்துவ திணைக்களத்தினால் நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்கி வைப்பு.

கொரொனா நோய் பரவலின் மத்தியிலும் பணி புரியுந்துவரும் மாநகர சபையின் சுகாதாரப் பகுதி ஊழியர்களின் ஆரோக்கியத்தினை கருத்திற் கொண்டு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தினால் நோய்த் தடுப்பு மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டன.
கோவிட் 19 எனும் கொரொனா நோய் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் சுகாதாரப் பணிகளை முன்னெடுத்துவரும் மட்டக்களப்பு மாநகர சபையின் ஊழியர்களின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்து அவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் நோய் தோற்றுக்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இன்று (28) நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டன.கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தினால் புதுக்குடியிருப்பு சித்த ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் ஊடாக மட்டக்களப்பு மாநகர சபைக்கு மேற்படி நோய்த் தடுப்புக்கான மருந்துகள் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாநகர ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ. சிவராஜா, மாநகர ஆயுர்வேத வைத்தியர் பிரதீபா பார்த்தீபன், சுகாதார நிலையியற் குழுவின் தவிசாளர் சிவம் பாக்கியநாதன் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள், ஊழியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்