நாடுமுழுவதும் அனைத்து தபால் நிலையங்களும் மே 4இல் திறக்கப்படும்!
நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் சுகாதார வழிகாட்டுதலின் அடிப்படையில் மே 04 ஆம் திகதி முதல் திறக்கப்படும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் 21 மாவட்டங்களில் தபாலகங்கள் திறக்கப்பட்டு தபால் சேவைகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இடர் வலயங்களாக அறிவிக்கப்பட்ட கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் வரும் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்போது 2020 ஆம் ஆண்டில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான கொடுப்பனவு நடவடிக்கைகள் மின்சார, நீர், தொலைபேசி கட்டங்களை செலுத்தும் நடவடிக்கைகள் போன்ற வழமையான செயற்பாடுகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தபால் நிலையங்களுக்கு வருபவர்கள் சுகாதாரப் பாதுகாப்பு முறையினை பின்பற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கபட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை