தேர்தலை திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதற்கான இயலுமை இல்லை – மஹிந்த தேசப்பிரிய!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுத் தேர்தலை திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதற்கான இயலுமை இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று(புதன்கிழமை) வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு கூடி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவது குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாட வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.