தந்தை செல்வாவின் 43வது நினைவுதினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது…

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 43வது நினைவுதினமானது இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தலைமையில் மட்டக்களப்பு பஸ்நிலையத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாநகரசபை உறுப்பினர்கள், வாலிபர் முன்னணி மாநிலத் தலைவர் கி.சேயோன், மட்டக்களப்பு வாலிபர் முன்னணியின் தலைவர், செயலாளர் உட்பட உறுப்பினர்கள் எனக் குறிப்பிடத்தக்க மட்டுப்படுத்தப்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவு அனுஸ்டிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 31ம் திகதி தந்தை செல்வாவின் பிறந்த தினம் மற்றும் ஏப்ரல் 26ம் திகதி அன்னாரின் நினைவு தினம். அன்றைய தினங்களில் கொரோணா தொற்று நிலைமையின் நிமித்தம் நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டமையினால் இந்நிகழ்வுகள் மேற்கொள்ளப்படாமையின் காரணமாக இன்றைய தினம் இந்நிகழ்வு சிறிய அளவில் ஏற்பாடு செய்து மேற்கொள்ளப்பட்டது.

பாதுகாப்பு நடைமுறைகள், சுகாதார சட்டதிட்டங்களைக் கருத்திற் கொண்டு சமூக இடைவெளியினைப் பின்பற்றி, மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்களுடன் பொலிஸாரின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புடன் மேற்படி நிகழ்வு மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.