மட்டு ஊடக அமையத்தில் தராகி சிவராமின் நினைவேந்தல்…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் அவர்களின் 15வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநககர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் நிலாந்தன் உட்பட ஊடகவியலாளர்கள் எனப் பரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது சிவராம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தி, அஞ்சலி விளக்கேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

சுகாதாரப் பாதுகாப்பு நிலைமை கருதி குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்களுடன் மிகவும் எளிமையான முறையில் இந்நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்