போதைப்பொருள் அதிகரிப்புக்கு காரணம் அதிக லாபத்தை ஈட்டிக் கொள்ளலாம் என்று ஒரு சிலரது எண்ணம்!
கொரோனா வைரஸ் அனர்த்தத்தில் மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த சமூக அபிவிருத்திச் சங்கங்கள் பாடசாலை சமூகம் பெற்றோர்களுடன் பொறுப்பதிகாரியின் பணிப்புரைக்கமைய பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் என்.சுசாதரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அனர்த்தத்தின் பின்னர் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றமை தொடர்பாக புதன்கிழமை(29) முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில்
எனது வழிகாட்டலில் பெயரிலும் புதிய உத்வேகத்துடன் இந்த தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் இதன் காரணமாக தீர்வை வரி செலுத்த படாத வடி சாராயங்கள் பெருமளவில் மீட்கப்பட்டுள்ளன. இத்தகைய செயற்பாடுகள் தெஹித்த கண்டிய ,அம்பாறை, உஹன, நீத்த , பொத்துவில், திருக்கோவில், காரைதீவு, கல்முனை பகுதிகளில் முன்னெடுத்து வருகின்றோம்.எனது நிர்வாகத்தின் கீழ் 2 மதுவரி திணைக்களங்கள் உள்ளன மக்கள் சேவை செய்ய 24 மணி நேரத்தியாலமும் கடமையை நாம் முன்னெடுத்து வருகின்றோம்
இப் பிரதேசத்தில் போதைப்பொருள் அதிகரிப்புக்கு காரணம் போதைப்பொருள் பாவனையால் அதிக லாபத்தை ஈட்டிக் கொள்ளலாம் என்று ஒரு சிலரது எண்ணம் தான் எமது பிரதேசத்தில் அதிக போதை பொருள் பாவனை காரணமாக அமைகின்றது.மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த சமூக அபிவிருத்திச் சங்கங்கள் பாடசாலை சமூகம் பெற்றோர்களுடன் பொறுப்பதிகாரியின் பணிப்புரைக்கமைய பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அதன் பிரதிபலனாக கூடியளவு மாணவர்கள் உள்ள பாடசாலைகளில் பெற்றோர்களும் பாடசாலை சமூகத்துடனும் ஆசிரியர் சமூகத்துடனும் கூடிய நெருக்கமாக செயற்பட்டதன் விளைவாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் பழக்கம் பரவுவதை முடிந்தளவு கட்டுப்படுத்த முடிந்தது. மற்றும் சமூகத்தில் உள்ள மாணவர்களுடன் சேர்ந்து நாங்கள் விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம். இந்த போதைப்பொருள் பாவனையால் மாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அவர்களது திறன்கள் மழுங்கடிக்கப்படுகிறது.எனவே இவற்றை நாம் முளையில் கிள்ளி எறிவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம் என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை