மாடுகள் அறுக்கப்படுகின்ற 6 மடுவங்களை ஆராய்ந்த பின்னர் மூட நடவடிக்கை

பாறுக் ஷிஹான்

மாடுகள் அறுக்கப்படுகின்ற 6 மடுவங்களை ஆராய்ந்த பின்னர் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பு புதன்கிழமை(29) முற்பகல் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

முஸ்லிம்களின் ரமழான் பண்டிகைநாளை முன்னிட்டு நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கும் அதே வேளை வீடுகளில் இருந்து இந்த பண்டிகையை கொண்டாடுங்கள் இறைவனைத் தியானிப்பதையும், வீட்டிலேயே இருப்பதையும், மக்களுக்கு உதவுவது முன்னிலைப்படுத்தி வருகிறோம். எமது சுகாதார பணிமனை கொடுத்த ஆலோசனையை பின்பற்றி வீதிகளில் போக்குவரத்து செய்வதை நாங்கள் காணவில்லை. வியாபார ஸ்தலங்களை தெரிந்து வைத்திருப்பவர்கள் அதற்கான நடைமுறைகளை பின்பற்ற அதற்குரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை . பல குறைபாடுகள் தென்பட்டாலும் இந்த பண்டிகை காலத்தில் இறைச்சியின் தேவை அதிகரித்துக் காணப்படுவதால் மக்களுக்கு கொடுக்கின்ற உணவின் சுகாதார தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய கடமை பார்த்துக்கொள் நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் அதன் நிமிர்த்தம் ஆடுகள் மாடுகள் அறுக்கப்படுகின்ற மடுவங்களை ஆராய்ந்தது.இதில்எமது சுகாதார பணிமனையின் கீழ் உள்ள பிரதேசங்களில் 9 மடுவங்களில் மூன்று மடுவங்கள் மாத்திரம் அதற்குரிய சுகாதார முறைகளுடன் காணப்பட்டது . ஏனைய ஆறு மடுவங்களையும் உடனடியாக மூட சொல்லி இருக்கின்றோம். பிரதேச சபைகள் முன்வந்து மடுவங்கரை திருத்தங்கள் செய்யாத வரை இந்த உத்தரவு தொடர்ச்சியாக காணப்படும்.

எமது பிரதேசங்களில் வெள்ளிக்கிழமைகளில் அதிகமான மக்கள் கடற்கரையில் கூடுவதைக் காணமுடிகின்றது. இடைவெளி ஒன்று கூடலை தவிர்த்தல் வீட்டுக்குள் தனித்திருத்தல் பொது சுகாதார நடைமுறைகளை கைக்கொண்டவர்களாக எங்களை மாற்றி தேசிய நெருக்கடிக்கு ஒன்றிணைந்து போராட வேண்டும் என அனைவரையும் அன்பாக வேண்டிக்கொள்கிறேன்.

 

மேலும் கொரோனா தொற்று க்கான சிகிச்சை நிலையங்களை மத்திய அரசே தெரிவு செய்கின்றது . அந்தவகையில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையா இ பாலமுனை வைத்தியசாலையா என மத்திய அரசே முடிவு செய்கின்றது. அதேற்கேற்றாற் போல் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

 

கொரோனா தொற்று சம்பவிக்க கூடிய ஏது நிலை கொண்டவர்களாக வயது முதிர்ந்தவர்கள் , நாட்பட்ட நோயாளிகள் ,கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் காணப்படுகின்றனர். நிச்சயமாக இவர்கள் அனைவரும் வீட்டில் தங்கியிருக்க வேண்டியவர்கள். அவசியத் தேவை அன்றி இவர்கள் வெளியில் வரக்கூடாது. பல நேரங்களில் இவர்களை வீதிகளில் காண்கின்றோம் இவர்களை வீதிகளில் காண்கின்றோம் முதியவர்களை காண்கின்றோம் முதியவர்கள் வியாபாரம் செய்கின்றனர் கர்ப்பிணி பெண்கள் பொருட்கள் கொள்வனவு செய்ய வருகின்றனர் குழந்தைகளையும் அழைத்து வருகின்றனர். அபாயகரமானவர்கள் தயவு செய்து வெளியில் செல்வதை தவிர்த்து கொள்ளுங்கள் .

 

வெலிசறை கடற்படை முகாமில் ஏற்பட்ட நோய் பரவலை அடுத்து 200க்கு அதிகமான கடற்படையினர் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று தனிமைப்படுத்தப்பட்டு வருவது யாவரும் அறிந்த விடையம் . அதனை தொடர்ந்து நாங்கள் முன்னணியில் இருந்து வேலை செய்கின்ற முப்படையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக எமது கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள பொலிஸ் நிலையங்கள் இ முப்படையினருக்கும் விழிப்புணர்வு திட்டத்தை இன்றிலிருந்து ஆரம்பித்து இருக்கின்றோம் . 30 முகாம்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் நாங்கள் கரிசினை கொண்டவர்களாக இருக்கின்றோம் என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.