ஆதரவற்றோர்களுக்கு மதிய உணவு வழங்குகின்றது லவ்லி கிறீம் ஹவுஸ்!

லவ்லி கிறீம் ஹவுஸ் சாவகச்சேரி உரிமையாளர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமியின் ஏற்பாட்டில், தென்மராட்சி பிரதேசத்தில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களைப் பராமரிப்பவர்கள், கைதடி சித்த போதனா வைத்தியசாலையில் நோயாளர்களைப் பராமரிப்பவர்கள், யாசகம் செய்பவர்கள், முதியவர்கள், அநாதைகள் போன்ற வறுமைநிலையில் உள்ள, ஒருவேளை உணவுக்காக அந்தரிப்பவர்களுக்கு சாவகச்சேரி லவ்லி கிறீம் ஹவுஸ் ஊடாக மதியபோசனம் வழங்கப்பட்டு வருகின்றது.

ஒருவேளை உணவுக்காக அந்தரிப்பவர்களுக்கு உதவுவதற்கு கருணையுள்ளங்கொண்ட் – தாம்மட்டும் வாழ்ந்தால் போதும் என்று வாழ்கின்ற இந்த சமூகத்தில் மற்றவர்களும் வாழவேண்டும் என்ற தூய சிந்தை படைத்த –

 

1-சிறி ராஐன் (கனடா)
2- கனடா தமிழ் தேசியக் கூட்டமைப்பு
3- நிமல்ராஜ் சிமியோன் (கனடா)
4- இந்துயன் லோகேஸ்வரன் (கனடா)
5- மதியுகன் இராமநாதன் (கனடா)

6. யோ..ரஜீவன் (ஜேர்மனி)
7-ராம்ஜி சுந்தரேஸ்வரன் (கனடா)
8- பாலன் சிவம்  (பிரான்ஸ்)
9- வீ எஸ் துரைராசா (கனடா)

10.ம..லலித்கரன் (சுவிஸ்)
11- குமார் (பட்டு) (கனடா)
12-ராகுலன் குணசீலன் (பிரான்ஸ்)
13- பாலாஜூ பாலசுப்பிரமணியம்  (கனடா)

14.  கனடா நடனக் K2B கல்லூரி

15.  எஸ். தேவதாஸ் (தாஸ்) (கனடா)

16. கனடா தென்மராட்சி மக்கள் அபிவிருத்தி நிறுவனம்

ஆகிய ஆன்றோர்கள் எம்மோடு இணைந்து தங்களது நிதிப்பங்களிப்பை செய்ய முன் வந்து  எமது பசி ஒழிப்பு பயணத்துக்கு தம்மாலான உதவிகளை நல்கியுள்ளார்கள். அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

இதேவேளை, ஊரடங்கு நேரத்தில் தனிமையில் தவிப்பவர்களுக்கும் 0213143384 என்ற தொலைபேசி ஊடாக அறியத் தந்தால் லவ்லி கிறீம் ஹவுஸ் ஸ்தாபனத்தினர் அவர்கள் இடம் நாடி உணவுகளை வழங்குவர் என்றும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

யாசகம் செய்பவர்கள், முதியவர்கள், அநாதைகள் போன்றோர் தமது பிரதேச கிராமசேவை உத்தியோகத்தரின் சிபாரிசின் ஊடாக அறியத்தர முடியும்.

இதேவேளை, கொரோனா காலத்தில் சாதாரண நேரத்திலும், ஊரடங்கு நேரத்திலும் உணவுகளைத் தயாரித்து கொண்டு சென்று வழங்குவதற்கு சுகாதாரத் துறையினர், பாதுகாப்பு தரப்பினர் என அனைவரினதும் அனுமதி பெறப்பட்டுள்ளது. இவ்வாறானவர்களுக்கு உதவுவதற்கு எம்மோடு இணைந்து பணியாற்ற விரும்புபவர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், சமூக அமைப்புகள், பொது அமைப்புக்கள் கருணை உள்ளங் கொண்ட அன்பர்கள் ஆகியோர் Viber ஊடாக 0778630268 என்ற இலக்கத்துடனும், அல்லது 0213143384 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாகவும் தொடர்புகொண்டு தம்மை இணைத்துக்கொள்ளமுடியும் என்றும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.