பாடசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க எந்த உத்தரவும் விடுக்கப்படவில்லை – கமல் குணரத்ன!
பாடசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க எந்த உத்தரவும் விடுக்கப்படவில்லை என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
முப்படையினருக்காகவும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் அமைப்பதற்கு அரசாங்க பாடசாலைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தொடர்ச்சியாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே குறித்த விடயத்தினை அவர் மறுத்துள்ளார்.
எனினும் மேலதிக முகாமாக பாடசாலைகள் பயன்படுத்தப்படும் எனவும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன கூறியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை