கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களுக்கு தெளிவுபடுத்தியது அரச புலனாய்வு பிரிவு!

நாட்டிற்குள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரவைக்கு அரச புலனாய்வு பிரிவினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றது.

இதன்போதே அரச புலனாய்வு பிரிவின் உயர்அதிகாரிகள் கொரோனா தடுப்பு திட்டம் குறித்து அமைச்சர்களுக்கு விளக்கமளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களை தனிமைப்படுத்தும் செயற்பாடுகளுக்கு அரச புலனாய்வு பிரிவினரின் உதவி பெற்றுக்கொள்ளப்படுவதாக முன்னர் அரசாங்கம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.