வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயம்!

வவுனியா வேப்பங்குளத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் படுகாயமடைந்துள்ளார்.

வவுனியா நகரில் இருந்து வேப்பங்குளம் நோக்கிச் சென்ற இரு மோட்டார் சைக்கிள்கள் கட்டுப்பாட்டை இழந்து மோதிக்கொண்டதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் முதியவர் படுகாயமடைந்ததுடன் இளைஞர் ஒருவரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்