முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை திங்களன்று பேச்சுக்கு அழைத்தார் மஹிந்த

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் அனைத்து முன்னாள் உறுப்பினர்களையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பேச்சுக்கு அழைத்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அலரி மாளிகையில் இந்தப் பேச்சு நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டு யோசனையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளன. ஆனால், அதனை நிராகரிக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். எனினும், எதிர்க்கட்சிகளின் கூட்டு யோசனை தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இந்தச் சந்திப்புக்கு அழைத்து விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்