இலங்கை திரும்ப விரும்பும்  மாணவர்களுக்கு அழைப்பு!

இலங்கைக்கு திரும்ப நினைக்கும் மாணவர்களுக்கு ஶ்ரீ லங்கன் விமான சேவை அழைப்பு விடுத்துள்ளது.

தமது சொந்த நாட்டுக்குத் திரும் விரும்புகின்ற இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கை கடவுச்சீட்டை கொண்டுள்ளவர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள மாணவர்கள், தங்களை அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் விரைவாகப் பதிவு செய்யுமாறு, ஶ்ரீ லங்கன் விமான சேவையினால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

குறிப்பிட்ட திகதிகளில் இலண்டன் மற்றும் மெல்பேர்ன் நகரங்களிலிருந்து கொழும்புக்கு விசேட விமானத்தை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ள ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம், வெளிவிவகார அமைச்சின் அனுமதிக்கு அமைய, இதனை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்