மரத்தில் இருந்து தவறி வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் மரம் ஒன்றில் ஏறிய சிறுவன் அதிலிருந்து தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கல்வியங்காடு, புதிய செம்மணி வீதியில் இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றது.

இச்சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மதுமிதன் (வயது-13) என்ற சிறுவனே உயிரிழந்தார்.

சிறுவனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணையை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.