கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 665 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 16 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை