கொரோனா தொற்றாளர்கள் குறித்த புதிய தகவல் வெளியானது!
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று(வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 16 பேரில் 9 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஜா-எல சுதுவெல்ல பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டோரில் மேலும் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்ட மற்றுமொருவர் நாரஹேன்பிட்டி-தபரே மாவத்தையில் கொரோனா தொற்றாளருடன் நெருங்கிப் பழகியவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரையில் 665 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை