ட்ரோன் கெமராக்களை பயன்படுத்தி மருத்துவப் பொருட்களை விநியோகிக்க தீர்மானம்!
ட்ரோன் கெமராக்களை பயன்படுத்தி மருத்துவப் பொருட்களை விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நாடளாவிய ரீதியில் ட்ரோன் (Drone) கெமராவை இயக்குபவர்கள் தொடர்பான தரவுகளை சேகரிக்க சிவில் விமான சேவைகள் அதிகார சபை தீர்மானித்துள்ளது.
ட்ரோன் கெமராவை இயக்கக்கூடிய 450 இற்கும் அதிகமானோர் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து ட்ரோன் கெமரா இயக்கக்கூடியவர்களை துரிதமாக பதிவு செய்துகொள்ளுமாறு அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.
கருத்துக்களேதுமில்லை