தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணனிடம் TID விசாரணை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர்.

கொக்குவிலில் உள்ள சட்டத்தரணி மணிவண்ணனின் வீட்டுக்கு நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், சில ஆவணங்களைக் காண்பித்து சுமார் 30 நிமிடங்கள் விசாரணைகளை முன்னெடுத்து அதனை குறிப்பெடுத்துச் சென்றுள்ளனர்.

மாவீரர் தினம் அனுஷ்டித்தமை தொடர்பாக ஒளிப்படம் ஒன்றைக் காண்பித்த பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், அந்த ஒளிப்படத்தை முன்வைத்து நபர் ஒருவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை உறுதிசெய்யும் வகையில் விசாரிப்பதற்கே வந்ததாகவும் அவர்கள் தெரிவித்திருந்ததாக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

எனினும் அது சில வருடங்களுக்கு முன்னர் எடுத்த பழைய ஒளிப்படமாக உள்ளதால் தனக்கு அந்நிகழ்வு தொடர்பாக நினைவில் இல்லை என பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.