நாவலப்பிட்டி நகரசபை தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது!

நாவலப்பிட்டி  நகரசபைத் தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் கினிகத்தேனை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் முற்றுகையையடுத்து அங்கிருந்து சிலர் தப்பியோடியுள்ளனர். இந்தநிலையில் அவர்களை கைதுசெய்வதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், சூதாட்டத்துக்காக பயன்படுத்தப்பட்டிருந்த 60 ஆயிரம் ரூபாய் பணம், மதுபான போத்தல்கள், நகரசபை தலைவரின் சொகுசு வாகனம் மற்றும் அவரின் சகாக்கள் பயணித்த வாகனம் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்