கொரோனாவுக்கு எதிராகப் போராடும் அனைவரையம் சிரம்தாழ்த்தி வணங்குகிறோம்- மே தினச் செய்தியில் அங்கஜன்

உலக தொழிலாளர் தினத்தன்று கொவிட்-19 நோய் தொற்றுக்கு எதிராகப் போராடும் அனைவருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், சுகாதாரப் பிரிவினர், பாதுகாப்புத் தரப்பினர், அரச ஊழியர்கள் உட்பட அனைவரும் சிரம் தாழ்த்தி கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இந்த பேரிடர் சூழ்நிலையில் தேசத்திற்காக இரவு பகலாக போராடும் அனைத்து சகோதர சகோதரிகளுக்காகவும் இதயத்திலிருந்து பிராத்தனை செய்வோமாக!” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்