பொலனறுவையில் கற்பாறைக்கு வெடி வைத்தவர் பலி!
பொலனறுவையில் கற்களை உடைப்பதற்காக வைக்கப்பட்ட வெடியில் அகப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலனறுவை, கலஹகல பிரதேசத்தில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள கருங்கல் அகழும் இடத்தில் கருங்கற்களை உடைப்பதற்காக குறித்த நபர் கல் வெடி வைத்துக் கொண்டிருந்துள்ளார். இதன்போது, அக்கல் வெடி வெடித்ததில் அதில் அகப்பட்டு குறித்த நபர் உயிரிழந்துள்ள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அதேயிடத்தைச் சேர்ந்த 60 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக பொலனறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை