மாநகர முதல்வரின் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி….

உலகெங்கும் வாழும் உழைக்கும் மக்களை நினைவு கூரும் ஓர் நன்நாளாக ஒவ்வொரு வருடமும் மே 1ஆம் திகதி சர்வதேச மே தினம் (தொழிலாளர் தினம்) அமைந்திருக்கின்றது. இந் நன்நாளில் உழைப்பாளர்கள் அனைவருக்கும் எனது தொழிலாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்றைய நாளில் மாத்திரம் தொழிலாளர்களின் நன்மைகள் மற்றும் உரிமைகள் தொடர்பில் பேசுவது உண்மையிலேயே ஏற்புடையதல்ல. தொழிலாளர்களின் உரிமைகளும், நலன்களும் அவர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களும் எழுத்து மூலம் சட்டமாக எப்பொழுதும் நடைமுறையில் இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு தொழிலாளரினதும் எதிர்பார்ப்பாகும். இதற்காக ஒத்துழைப்பது என அனைத்து தரப்பினரும் இந் நாளில் உறுதியெடுத்தல் அவசியமாகும்.

மேலும் தற்பொழுது நிலவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் அசாதாரண சூழ்நிலையிலும் பொது மக்களை பாதுகாக்கும் பல்வேறு வேலைத்திட்டங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதாரத்துறையினர், பாதுகாப்புத்தரப்பினர் மற்றும் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரினதும் தியாகங்களையும் இங்கு நினைவு கூருகின்றேன். இவர்களின் தியாகங்கள் போற்றுதற்குரியதாகும்.

முழு உலகையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் பிடியிலிருந்து உழைக்கும் மக்கள் மீண்டு சிறப்பான வாழ்க்கையை நோக்கி நகரவும், அனைவரையும் பாதுகாக்கவும் எல்லாம் வல்ல இறைவனின் ஆசியை வேண்டி நிற்பதோடு மீண்டும் ஒரு முறை தொழிலாளர் தின வாழத்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.