ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமில் நால்வருக்கு கொரோனா தொற்று-வைத்தியர் சுகுணன்

அம்பாறை, ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்தியர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

இந்நிலையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நால்வரும் சிகிச்சைககாக காத்தான்குடி வைத்தியசாலைக்கு நேற்று (வியாழக்கிழமை) இரவு அனுப்பிவைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், “கடற்படையினரால் பராமரிக்கப்படும் மேற்படி முகாமில் வத்தளை, ஜா-எல, சுதுவெல பகுதியைச் சேர்ந்த பலர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நால்வருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து, குறித்த நால்வரும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு சொந்தமான அம்பியூலன்ஸ் வண்டியூடாக உடனடியாக காத்தான்குடி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்” என அவர் குறிப்பிட்டார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.