வவுனியாவில் இருந்து டுபாய் நாட்டுக்கு பப்பாசி ஏற்றுமதி!

வவுனியாநிருபர்

வவுனியாவில் உள்ள பழச் செய்கையாளர்களிடம் கொள்வனவு செய்யப்பட்ட பப்பாசிகளை டுபாய் நாட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை ஆரம்பி வைக்கப்பட்டது.

வவுனியா, பம்பைமடு கமநல அபிவிருத்திணைக்களப் பிரிவில் இந் நிகழ்வு இன்று இடம்பெற்றது. மாவட்ட கடநல அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் இ.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன அவர்கள்  கலந்து கொண்டு ஏற்றுமதிக்கான விற்பனையை ஆரம்பித்து வைத்தார்.ஒரு கிலோ பப்பாசி 20 ரூபாய் படி கொள்வனவு செய்யப்பட்டு டுபாய் நாட்டுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பழச் செய்கையாளர்களுக்கான சந்தை வாய்ப்பு வசதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கமநல அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் இ.விஜயகுமார் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் மேலதிகமாக மரக்கறிகள் மற்றும் பழங்கள் தேவையான அளவு காணப்பட்டன. இவற்றினை விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை காணப்பட்ட போதும், தற்போது வரை 50க்கு மேற்பட்ட நபர்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அவற்றை கொண்டு சென்று விற்பனை செய்ய உரிய அனுமதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தங்களது மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை காணப்பட்டால் அவர்களை தொடர்பு கொண்டு விற்பனை செய்ய முடியும். அதன் ஒரு கட்டமா துபாய் நாட்டுக்கு பழங்களை ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பழச் செய்ரகயாளர்கள் நன்மைகளைப் பெற முடியும் எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.