தொழிலாளர் தினத்தில் தொழிலாளரின் வாழ்வை பாதுகாக்க வேண்டிய கடமைப்பாடு எமக்கு இருக்கின்றது: கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி

பாறுக் ஷிஹான்

கொரோனா  வைரஸ் தாக்கத்தின் காரணமாக எமது நாட்டில் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம் தொழிலாளர் தினத்தில் இந்த தொழிலாளர் தின நிகழ்வை சந்தோசமாக கொண்டாட முடியாத சூழ்நிலையிலும் அவர்களது வாழ்வே பாதுகாக்க வேண்டிய கடமைப்பாடு எமக்கு இருக்கின்றது என   கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தெரிவித்தார்.

கல்முனை சுபத்திராம விகாரையில் தொழிலாளர் தினம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை(1) கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

கடந்த மூன்று மாதங்களாக இலங்கை மாத்திரமல்ல இந்த உலகளாவிய ரீதியில் மக்கள் அனுபவிக்கக்கூடிய கொரோனா  வைரஸ் தாக்கம் இருக்கின்றதுஇந்த வைரஸ் தாக்கத்தின் காரணமாக எமது நாட்டில் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம் தொழிலாளர் தினத்தில் இந்த தொழிலாளர் தின நிகழ்வை சந்தோசமாக கொண்டாட முடியாத சூழ்நிலையிலும் அவர்களது வாழ்வே பாதுகாக்க வேண்டிய கடமைப்பாடு எமக்கு இருக்கின்றது

இந்த அரசாங்கம் சமுர்த்தி பயனாளிகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கியதோடு ஏனைய தொழிலாளர்களுக்கும் 5000 ரூபாய் வழங்க முன்வந்திருப்பது சந்தோஷமான ஒரு முன் வந்திருப்பது சந்தோஷமான ஒரு விடயமாகும்.எந்த தொழில் செய்தாலும் அந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு சுகாதாரம் விடயங்களை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு மாத்திரமல்ல தனியார் நிறுவனங்களுக்கும் இருக்கின்றன. இடர் காலத்தில் அரசாங்கத்தின் செயற்பாடு பாராட்டுக்குரியதாக இருக்கின்றது.

ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு சென்று வருவதற்கான தடைகள் தற்போது இருந்தாலும் பலர் வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன இதனை சுகாதாரப் பணிமனை கவனத்திற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்