தொழிலாளர் வயிற்றில் அடித்து கல்முனை மாநகரசபை ஆணையாளர் சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறார்: எஸ்.லோகநாதன்

பாறுக் ஷிஹான்

தொழிலாளர் வயிற்றில் அடித்து  கல்முனை மாநகரசபை ஆணையாளர் சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம்   காரைதீவு பகுதியில் வெள்ளிக்கிழமை(1)  மதியம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

கல்முனை மாநகரசபை ஆணையாளர் சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக தான் நாங்கள் கருதுகிறோம் தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை குறித்து அவர் சிந்திப்பதில்லை தங்களுடைய நிர்வாகத்தையும் தங்களுடைய வசதிகளையும் பாதுகாப்பதில் அவர்கள் குறிக்கோளுடன் இருக்கின்றனர்.

மாகாண ஆளுநரிடம்  வினயமாக கேட்பது யாதேனில் கல்முனை மாநகர சபை ஆணையாளரை மாற்றிவிட்டு வேறு  ஒரு ஆணையாளரை நியமிக்க வேண்டும் கிழக்கு மாகாணத்தில் மாகாண பணிப்பாளராக இருந்த ஒருவர் கல்முனை மாநகர சபை ஆணையாளராக இருக்க வேண்டிய அவசியமில்லை மாகாணசபையில் பெரிய பதவியில் இருந்துகொண்டு தற்போது இங்கு வந்து பணியாற்ற வேண்டிய அவசியமில்லை காரணம் அங்கு உள்ள இங்கு சூழ்நிலை தொழிலாளர்கள் நலன் சார்ந்த விடயங்களில் அக்கறை உள்ள ஒருவரை நியமிப்பது தான் சாலப்பொருத்தமானது.

கடந்த காலத்தில் கல்முனை மாநகர சபை ஆணையாளருக்கு நாங்கள் அங்குள்ள தொழிலாளர்கள் நசுக்கப்படுவது குறித்து  நாங்கள் தெரியப்படுத்தி அங்கு ஊழியர்கள் சங்கத்தை ஆரம்பிப்பதற்கு கேட்டிருந்தோம் இதுவரை அவர் எழுத்துமூல அறிவித்தல்களை எங்களுக்கு இன்னும் பிடிக்கவில்லை.கடந்தகாலத்தில் சர்வாதிகாரப் போக்குடன் செயற்பட்ட கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக கல்முனை மாநகர சபை முதல்வர் ஊழியர்களுடன் களத்தில் நின்று பாடுபட்டவர்கள் கடந்தகாலத்தில் ஊழியர்களாக நியமன பிரச்சினையில் ஆளுநர் மாளிகைக்குச் சென்று சண்டையிட்டு அந்த ஊழியர்கள் நியமனத்தை பெற்றுக்கொடுத்து கல்முனை மாநகர சபைக்கு உறுதுணையாக எமது தொழிற்சங்கம் இருந்தது.

தற்போதுள்ள கல்முனை மாநகரசபை ஆணையாளர் தொழிற்சங்கங்களை மதிப்பதில்லை தொழிலாளர்களை மதிப்பதில்லை ஆணையாளர் இவர் பதவிக்கு தகுதி இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.