மாந்தீவு வைத்தியசாலை சிறை கைதிகளுக்கு!

ஜே.எப்.காமிலா பேகம்-

மட்டக்களப்பு மாந்தீவில் உள்ள மாந்தீவு வைத்தியசாலையை, சிறைக் கைதிகளை தங்கவைப்பதற்காக பயன்படுத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் சுகாதார அமைச்சிடம்  அனுமதி கோரியுள்ளது.

இதற்கான  கடிதத்தையும் சிறைச்சாலைத் திணைக்களம் சுகாதார அமைச்சுக்கு அனுப்பி உள்ளது.

மேலும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளும், சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளும் குறித்த வைத்தியசாலையை கடந்த வெள்ளிக்கிழமை சென்று, பார்வையிட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சு செயலாளர் பத்ரானி ஜயவர்தன தெரிவித்தார்.

புதிதாக சிறைவரும் கைதிகள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் 14 நாட்கள் பூசா, நீர்கொழும்பு. பல்லன்சேன மற்றும் போகம்பர ஆகிய சிறைச்சாலைகள் வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

14 நாட்கள் தனிமைப்படுத்திய பின்னரே அவர்கள் சிறைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இருப்பினும் , கொரோனா வைரஸ் சிறைச்சாலைக்குள்ளும் பரவும் என்பதால், புதிதாக வரும் கைதிகளை மாந்தீவு வைத்தியசாலையில் தங்கவைப்பதற்கான யோசனை கொண்டு வரப்பட்டுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.