கொரோனா ஒழிப்புக்காக அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் உதவி!

கொரோனா ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டத்தின் வெற்றிக்காக பல்வேறு தரப்பினர் தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

சிங்கப்பூர் மகா கருணா பௌத்த சங்கம், ஸ்ரீபாத நலதன்னி கல்ப ருக்ஷ விகாராதிபதி சங்கைக்குரிய தெனிபே நந்த தேரரினால் 07 சத்திர சிகிச்சை கட்டில்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

அதன் சமய ஆலோசகர் கலாநிதி சங்கைக்குரிய குணரத்ன தேரர் அக்கட்டில்களை ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரோஹண அபேரத்னவிடம் கையளித்ததைத் தொடர்ந்து அவை சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டன.

சங்கைக்குரிய பஹரியே சுமனரத்ன தேரரும் சுகாதார அமைச்சின் உதவிப் பணிப்பாளர் வைத்தியர் சுதர்ஷனவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை, சீகோ சர்வதேச தனியார் நிறுவனத்தின் தலைவர் ரவீந்திர கயாநாத் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் பெறுமதியான பியோ லைப் நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்றை ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஷ்வர பண்டார அவர்களிடம் அன்பளிப்பு செய்தார்.

குறித்த இயந்திரம் நோய்த்தடுப்பு மத்திய நிலைய பாவனைக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்