பிரதமர் மஹிந்த விடுத்த அழைப்பு – கலந்துரையாடலில் கலந்துகொள்வது குறித்து பேச்சளவில் தீர்மானம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை ஏற்று இக்கலந்துரையாடலில் பங்கேற்பது தொடர்பாக பேச்சளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

குறித்த கூட்டத்தில் பங்கேற்று கட்சி சார்பான வேண்டுகோளை சமர்ப்பிப்பது தொடர்பாக பேச்சளவில் இணக்கம் தெரிவிக்கப்பட்டபோதும் இதன் முடிவுகள் கட்சியின் தலைமையினால் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

குறித்த அழைப்பு தொடர்பாக முன்னர் கருத்து தெரிவித்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சமபந்தன், அந்த கலந்துரையாடலில் கலந்துகொள்வோம் என கூறியிருந்தார்.

இதன்போது நாட்டு மக்களினதும் நாட்டினதும் நலன் கருதி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் எடுத்துரைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் பழைய நாடாளுமன்றத்தை கூட்டப்போதவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டவட்டமாக அறிவித்ததை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தவிர ஏனைய கட்சிகள் குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் கலந்துரையாடலை புறக்கணிக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.