கேப்பாப்பிலவில் உயிரிழந்த வயோதிபர்கள் இருவருக்கும் கொரோனாத் தொற்றில்லை – இராணுவத் தளபதி தெரிவிப்பு…

இராணுவத் தளபதி தெரிவிப்பு

“முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் திடீர் சுகயீனமுற்று நேற்று உயிரிழந்த வயோதிபர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது மருத்துவ பரிசோதனைகளில் உறுதிப்படுத்தியுள்ளது.”

– கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரான இராணுவத் தளபதி லெப்டினன்ட் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

“இருவரும் பல்வேறு நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தவர்கள். மருத்துவ பரிசோதனையில் இருவரும் முதுமையின் காரணமாக பொதுவான நோய்களால் இறந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” எனவும் அவர் மேலும் கூறினார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.