ஊரடங்கு வேளையில் மணல் கடத்தல்: மூவர் கைது, வாகனங்கள் பறிமுதல்!

ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிவந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், மணல் ஏற்றிவந்த இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும் ஒரு கனரக வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை, கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய வாகனேரி, பொண்டுகள்சேனை பகுதியில் இருந்தே மணல் கடத்தல் இடம்பெற்றுள்ளது.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் மணல் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனைத் தடுப்பதற்கு தனது தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.