இளம் கலைஞர்களினால் கொரோனா பற்றிய விழிப்புணர்வு பாடல் காரைதீவிலிருந்து…

கிழக்கிலங்கையில் உள்ள மீன்பாடும் தேனாடாம் மட்டுமாநகரில் அகிலம் போற்றும் முத்தழிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அவதரித்த காரைதீவு எனும் பழந்தழிழ் கிராமத்தில் கொரோனா தொற்றுக்கு எதிரான விழிப்பூட்டல் பாடல் ஒன்று காரைதீவைச் சேர்ந்த சர்வேஷ்வரா கலை மன்ற குழுவினரால் ” கொரோனா போ”  என்ற பாடல் காணொளி

உலகை உலுக்கும் கோரோனா பற்றிய விழிப்புணர்வுப் பாடல்கள் பல உலகளாவிய ரீதியில் அவரவர் பாணியில் வெளியிடப்படுகின்ற இந்நிலையில் காரைதீவை சேர்ந்த பல இளைஞர்கள் கைகோர்த்துள்ளனர். இப்பாடலின் வரிகளானது சி.துலக்ஸன் என்பவரால் எழுதப்பட்டு ச.துஷாந்த்,ப.சஜிந்தன், சி.துலக்ஸன் ஆகியோர்களால் பாடப்பட்டு ஒளிப்பதிவானது ச.சஜீத்(Future dreams studio) என்பவராலும், ஒலிப்பதிவானது பா. உமாப்பிரியன் என்பவராலும் மற்றும் கலை, ஒப்பனை வடிவமைப்பு மா.ஜெயநாதன், சி.சிறிக்காந்தன், சி.சிறிநவநீதன்  ஆகியோராலும் மேலும் ஊடக அனுசரணை தமிழ் சி.என்.என் அகியோரினால் நெறியாளப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் கிடைத்த வளத்தை கொண்டு உருவாக்கப்பட்ட கொரோனா பாடல் எம் மக்களை சென்றடைந்து சிறு மாற்றத்தை கொண்டு வந்தாலும் எங்கள் முயற்சி வெற்றியளிக்கும். அதற்கு மேலாக எம் மனம் நிறைவடையும். இந்த கொடிய நோயிலிருந்து மக்களை மீட்போம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.