ஊரடங்கு பகுதிகளில் தபால் சேவை இல்லை!

மேல் மாகாணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், அவ்விடங்களிலுள்ள தபால் அலுவலகங்கள் நாளைமறுதினம் திங்கட்கிழமை திறக்கப்பட மாட்டாது என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் தபால் அலுவலகங்கள் திறக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை,  ஏனைய மாவட்டங்களில் தபால் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாகவும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

தபால் அலுவலங்களிலும் உப தபால் அலுவலகங்களிலும் தொற்றுநீக்கம் செய்யப்படவில்லை என்பதோடு, ஊழியர்களுக்குத் தேவையான  சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்கள் உரிய முறையில் கிடைக்கவில்லை எனக் கூறி, இது போன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக  ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி ஏற்கனவே தெரிவித்திருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்