நேற்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 12 பேர் கடற்படையினர்!

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான நோயாளிகளாக நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 12 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று மட்டும் 15 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அதில் ஏனைய மூன்று பேர் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், வைத்திய கண்காணிப்பின் கீழ் 526 பேர் உள்ளனர் என்றும் கொழும்பு, புத்தளம், கம்பஹா ஆகிய பகுதிகளிலேயே அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்