கொழும்பு பறந்தனர் தமிழ்க் கூட்டமைப்பு முன்னாள் எம்பிக்கள்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கொழும்பு சென்றுள்ளனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பில் நாளை காலை 10 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என்று உத்தியோகபூர்வமாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கொழும்பு சென்றுள்ளனர்.
கொழும்பிலுள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று ஒன்றுகூடும் முன்னாள் எம்.பிக்கள் நாளை மஹிந்தவின் கூட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் எப்படியான வேண்டுகோள்களைச் சமர்ப்பிப்பது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கவுள்ளனர். அதன்பின்னர் மஹிந்தவின் கூட்டத்தில் பங்கேற்பதற்கான காரணம் குறித்து கூட்டமைப்பின் தலைமை அறிக்கை ஒன்றையும் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை