1,748,020 பேருக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு!

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை அடுத்து 1,748,020 பேருக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி, கொடுப்பனவுகளை வழங்குவதற்காக 8.05 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

250,000 க்கும் மேற்பட்ட சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு 5,000 வழங்க 12.62 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது. அத்தோடு கொடுப்பனவு வழங்குவதற்காக மற்றொரு தரப்பும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.

5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுக்காக மேலும் பலர் விண்ணப்பித்துள்ளதாகவும் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.