உதயன் ஊடகப் பணியாளர்களின் படுகொலை நினைவு நாள் அனுஷ்டிப்பு!

உதயன் பத்திரிகை நிறுவனத்தினுள் புகுந்து ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் படுகொலையான ஊடகப் பணியாளர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.

உதயன் பத்திரிக்கை நிறுவனத்தில் கொல்லப்பட்ட ஊடகப் பணியாளர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் நேற்று (சனிக்கிழமை) மாலை 6.10 மணிக்கு நடைபெற்றது. அதன்போது அவர்களது திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள ‘உதயன்’ பத்திரிகை நிறுவனத்தினுள் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இரு ஊடகப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணைகளில் எவ்வித முன்னெற்றமும் இல்லாமல் இன்றுவரை அந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கிடப்பிலேயே உள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்