யாழ். கட்டப்பிராயில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கு உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!
யாழ்ப்பாணம் கட்டப்பிராய் பகுதியில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கு உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
பிரித்தானியாவில் இயங்கும் கல்வியன்காடு நல்லூர் நண்பர்கள் அமைப்பின் நிதிப் பங்களிப்புடன் இருபாலை தெற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் அனுசரணையுடன் இந்த உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
கட்டப்பிராய் ஆரம்ப சுகாதார நிலைய குடும்பநல உத்தியோகத்தர் ஊடாக இப்பொருட்கள் கட்டப்பிராய் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் குடும்பநல உத்தியோகத்தர், பணியாளர்கள், பிரதேசசபை உறுப்பினர் நடேசபிள்ளை கஜேந்திரகுமார், இருபாலை தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் பாக்கியராசா பிரதீபன், இருபாலை தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவி சறோஜா தங்கராசா மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
கொரோனா தொற்றுநோய் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் அன்றாடம் உழைக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உலர் உணவுப் பொருட்களை வழங்குவதில் இருபாலை தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கம் பொது அமைப்புக்களுடன் இணைந்து 600இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை உதவித் திட்டங்களை வழங்கியுள்ளது.
கருத்துக்களேதுமில்லை