ஹட்டனில் நேற்றிரவு 14 வீடுகளைக் கொண்ட நெடுங்குடியிருப்பில் தீ

ஹட்டனில் நேற்றிரவு 14 வீடுகளைக் கொண்ட நெடுங்குடியிருப்பில், தீ விபத்தொன்று ஏற்பட்டது.

பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எபோட்ஸிலி தோட்டத்தில் 14 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு ஏற்பட்ட இந்த விபத்தினால், 9 வீடுகள் முற்றாகவும் 5 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

இதனால் 50 இற்கும் மேற்பட்டவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உரிய இடமொன்றில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த தோட்டத்தில் கோவிலுக்கு அருகிலுள்ள நெருங்குடியிருப்பிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து பொலிஸாருக்கும், தீயணைப்பு பிரிவினருக்கும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, பொது மக்களுடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீவிபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாதபோதிலும், பெருமளவில் பொருட் தேசங்கள் ஏற்பட்டுள்ளன.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியபபடாத நிலையில், பொலிஸார் இதுதொடர்பான விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.