அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!

அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் தெனியாய பிரதேசத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் நெருக்கடி நிலையில் வறுமை நிலையில் உள்ள தெனியாய பிரதேசத்தில் உள்ள பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று (சனிக்கிழமை) வழங்கப்பட்டன.

இதன்போது தெனியாய பிரதேசத்தில் உள்ள சுமார் 500இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் காரணமாக அன்றாடம் பொருளாதார ரீதியாக பல குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர்.

நாளாந்த கூலித் தொழில் புரியும் பலர் தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் குறித்த குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் பணியில் பல்வேறு அமைப்புக்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்