நாட்டுக்கும் மக்களுக்கும் ஆசி வேண்டி ஜயஸ்ரீ மகா போதியில் இடம்பெற்ற சமயக் கிரியைகளில் ஜனாதிபதி பங்கேற்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டுக்கும் மக்களுக்கும் ஆசி வேண்டி நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் அநுராதபுரத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க ஜயஸ்ரீ மகா போதியில் இடம்பெற்ற சமயக் கிரியைகளில் பங்கேற்றிருந்தார்.

அநுராதபுரம் புனித பூமிக்கு வருகைதந்த ஜனாதிபதி அடமஸ்தானாதிபதி கலாநிதி சங்கைக்குரிய பல்லேகம சிறினிவாச நாயக்க தேரரை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார்.

ருவன்வெலி மகா சேய வளாகத்தில் இடம்பெற்ற பூஜையிலும் கலந்துகொண்ட ஜனாதிபதி சமயக் கிரியைகளில் ஈடுபட்டு நாட்டுக்கும் மக்களுக்கும் ஆசி வேண்டி பிரார்த்தித்தார். அங்கு விசேட பிரித் பாராயண நிகழ்வொன்றும் இடம்பெற்றது.

ருவன்வெலி சேய விகாராதிபதி சங்கைக்குரிய பல்லேகம ஹேமரத்ன நாயக தேரரை சந்தித்த ஜனாதிபதி தேரருடன் சுமுகமாக கலந்துரையாடினார்.

மிரிசவெடிய ரஜமகா விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவ்விகாரையின் ஈதலவெடுனுவௌ ஞானதிலக நாயக தேரரையும் சந்தித்தார்.

கொரோனா ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டம் பற்றி ஜனாதிபதி தேரருக்கு விளக்கினார். அந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனைத்து மகா சங்கத்தினரதும் ஆசிகள் உள்ளதாக தேரர் குறிப்பிட்டார்.

அநுராதபுரம் ஸ்ரீ சம்புத்த ஜயன்தி விகாரைக்கு சென்ற ஜனாதிபதி, விகாராதிபதி நுகேதென்ன பஞ்ஞானந்த தேரரை சந்தித்து ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.