33 குற்றங்களுடன் தொடர்புபடாத கைதிகளுக்கு சலுகைகளை வழங்க தீர்மானம்!

தண்டனை சட்டக்கோவையில் உள்ளடக்கப்பட்டுள்ள 33 குற்றங்களுடன் தொடர்புபடாத கைதிகளுக்கு சலுகைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் M.J.W.தென்னக்கோன் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெசாக் பூரணை தினத்தன்று சலுகை திட்டங்களை அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, 33 குற்றங்களுக்குள் இல்லாத 65 வயதிற்கு மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர கடந்த ஏப்ரல் 07 ஆம் திகதி வரை அபராதப் பணம் செலுத்த முடியாத குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகளையும் விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்