அதிவேக வீதி நிர்மாணப் பணிகளுக்காக கடன் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

அதிவேக வீதி நிர்மாணப் பணிகளுக்காக 3,170 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கு பெருந்தெருக்கள் அமைச்சிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு கடன் இதற்காக பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் அதிவேக வீதி தொடர்பாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் ஊடகங்களுக்கு தௌிவூட்டுமாறு வேண்டுகோள் விடுப்பதாக அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறித்து எதிர்கட்சியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.