கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகளவில் 35 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, உலகளவில் 35 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், இதில் 11 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு 2 இலட்சத்து 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா விளங்குகின்றது. அங்கு கிட்டத்தட்ட 11 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இத்தாலி, பிரித்தானியா, ஸ்பெயின் போன்ற நாடுகள் உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றின் தாயகமான சீனாவில் தற்போது வைரஸ் தொற்று 90 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்