மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அதிகஷ்டப் பிரதேச மக்களுக்கு உதவி
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணா வைரஸின் காரணமாக ஊடரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அதிகஷ்டப் பிரதேசங்களுக்கு வீடு வீடாக சென்று உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
அந்தவகையில் முறுத்தனை, பிரம்படித்தீவு, சாராவெளி, பெரியவோரம், வட்டிபோட்டமடு, பூலாக்காடு, அம்புஸ்குடா, பொண்டுகள்சேனை போன்ற கிராமத்தில் மிகவும் வறிய நிலையில் வாழும் இறுநூறு குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
இதில் அரிசி, போதுமை மா, சீனி, சோயாமீற் அடங்களான 1300 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் அவுஸ்ரேலியா அன்பாலயம் அமைப்பின் நிதி உதவி மூலம் வழங்கப்பட்டன.
அன்பாலயம் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான க.கமலநேசனின் ஏற்பாட்டில் பிரம்படித்தீவு கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் ம.ஜெயசீலன், சங்க உறுப்பினர்கள் சகிதம் கலந்து கொண்டு உதவிகள் வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முறுத்தனை, பிரம்படித்தீவு, சாராவெளி, பெரியவோரம், வட்டிபோட்டமடு, பூலாக்காடு, அம்புஸ்குடா, பொண்டுகள்சேனை போன்ற கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகளற்ற நிலையில் காணப்படுகின்றது.
குறித்த கிராம மக்களின் ஜீவனோபாய தொழிலாக விவசாயம், மீன்பிடி விளங்குகின்றது. அதிலும் பெரும்பலான மக்கள் கூலித் தொழில் செய்து வாழ்ந்து வந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணா வைரஸின் காரணமாக ஊடரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நிலையில் தொழில் பாதிக்கப்பட்டு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை