அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட நால்வர் கைது!
அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தலைவர் முனிதாச கமகே உள்ளிட்ட நால்வர் மஸ்கெலியா – மவுசாகலை பொலிஸ் காவலரணில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு அனுமதிப்பத்திரமின்றி, அக்குரஸ்ஸயிலிருந்து சிவனொளிபாத மலைக்கு லொறியொன்றில் பயணித்த போதே நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட லொறியில் பயணப்பொதிகள் சில காணப்பட்டதுடன், அது பிரதேச சபைக்கு சொந்தமான லொறி எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை