பொருளாதார நெருக்கடி காரணமாக பணத்தை அச்சிடும் நிதி அமைச்சு

அரசாங்கத்தால் இதுவரை அச்சிடப்பட்ட மொத்த பணம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2% க்கும் குறைவாகவே உள்ளது என்று நிதி அமைச்சு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளிப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தற்போது நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் நிதி கோரிக்கைகளை பூர்த்தி செய்ய பணத்தை அச்சிடுவதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிக்கல தெரிவித்துள்ளார்.

அதிகப்படியான பணம் அச்சிடுவதன் விளைவாக எதிர்காலத்தில் பொருளாதாரத்திற்கு ஏதேனும் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படும் என்ற கூற்றினை நிராகரித்த அவர் இது இலங்கையில் மட்டுமல்ல, அமெரிக்கா உட்பட பிற நாடுகளிலும் நடைமுறைப்படுத்த படுகின்றது எனக் கூறினார்.

அரசாங்கத்தால் அச்சிடப்பட்ட பணம் உள்ளூர் சந்தையில் செலுத்தப்பட்டதாகவும், இதன் விளைவாக, பணவீக்கத்தை அரசாங்கம் குறைந்த மட்டத்தில் வைத்திருக்க முடியும் என்றும் எஸ்.ஆர். ஆட்டிக்கல வலியுறுத்தினார்.

பணத்தை அச்சிடுவதில் எந்தவொரு எதிர்மறையான தாக்கத்தையும் நான் காணவில்லை, இது போன்ற ஒரு நேரத்தில், எந்தவொரு அரசாங்கத்திற்கும் உள்ள ஒரே வழி இதுதான். அமெரிக்க அரசாங்கம் கூட இதே முறையைப் பயன்படுத்தியது என குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.