சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்புடையவர் என கைதானவர் இன்று நீதிமன்றில் ஆஜர்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைதான சந்தேகநபர் இன்று கோட்டை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

குறித்த சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி கோரவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக கூறப்படும் சஹ்ரான் ஹாசிமுக்கு  அடிப்படைவாத போதனைகள் மற்றும் ஆயுதப் பயிற்சியை வழங்கிய குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த தொண்டு நிறுவனமொன்றின் உரிமையாளர் என்றும் பொலிஸார் நேற்று தெரிவித்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.